கட்சியை விட்டு நீக்கியது ஜனநாயக படுகொலை: பூஷண், யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு!

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியிலிருந்து பிரசாந்த் பூஷன்,யோகேந்திர யாதவ் ஆகிய இருவரும்  ஆதரவாளர்களுடன் அதிரடியாக நீக்கப்பட்டது ஜனநாயகப் படுகொலை என்று இருவரும் குற்றம் சாட்டியுள்ளனர்.  

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழுவில் இருந்து பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் அதிரடியாக நீக்கப்பட்டனர். இவர்களுடன் யோகேந்திர யாதவ் ஆதரவாளர்களான ஆனந்த குமார், அஜித்ஷா ஆகியோரும் நீக்கப்பட்டனர். இதனால் ஆவேசம் அடைந்த யோகேந்திர யாதவும், பிரசாந்த் பூஷணும் கூட்டத்தை விட்டு வெளியேறினார்கள்.

யோகேந்திர யாதவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தேசிய நிர்வாகக்  குழுவில் நடந்த வாக்கெடுப்பு மோசடியானது. முன் கூட்டியே தீர்மானத்தை ரகசியமாக தயாரித்து வைத்து நிறைவேற்றியுள்ளனர். திட்டமிட்டு ஜனநாயகப்படுகொலை நடந்துள்ளது. ஆம் ஆத்மியில் உட் கட்சி ஜனநாயகம் இல்லை. எங்களை ஆதரித்தவர்கள் தாக்கப்பட்டுள்ளனர் "என்றார்.

பிரசாந்த் பூஷண் கூறுகையில், "தான் நீக்கப்பட்டது சட்ட விரோதமானது. கூட்டத்துக்கு குண்டர்களை அழைத்து வந்து எங்களது ஆதரவாளர்களைத்  தாக்கினார்கள். இந்தக்  கூட்டம் முழுக்க முழுக்க சட்ட விரோதமானது" என்றார்.

ஆம் ஆத்மியின் இந்த உட்கட்சி குளறுபடிகள், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!