வெளியிடப்பட்ட நேரம்: 13:29 (21/04/2015)

கடைசி தொடர்பு:13:29 (21/04/2015)

கெஜ்ரிவால் சர்வாதிகாரி: ஷாசியா இல்மி கடும் தாக்கு!

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியிலிருந்து பிரசாந்த் பூஷன் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோரை நீக்கியதன் மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் சர்வாதிகாரி என்பது நிரூபணமாகியுள்ளது என்று அக்கட்சியிலிருந்து விலகிய ஷாசியா இல்மி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

"அரவிந்த் கெஜ்ரிவால் சர்வாதிகாரி என்பதை இது காட்டுகிறது. கட்சியின் கொள்கைகளை அவர்  அலட்சியம் செய்வதுடன், கட்சியையே தனது கைக்குள் கொண்டு வந்துவிட்டார் "

என்று இல்மி கூறியுள்ளார்.

கெஜ்ரிவாலின் நடவடிக்கைகள் பிடிக்காததால் தான் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே அக்கட்சியிலிருந்து இல்மி விலகினார். பின்னர் இல்மி பாஜகவில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்