வெளியிடப்பட்ட நேரம்: 14:32 (27/10/2011)

கடைசி தொடர்பு:14:32 (27/10/2011)

AFSPA விவகாரம் உள்துறை வரம்புக்குட்பட்டது: ராணுவம்

புதுடெல்லி, அக்.27,2011

ஜம்மு - காஷ்மீரில் சில இடங்களில் நடைமுறையில் உள்ள சர்ச்சைக்குரிய 'ராணுவத்துக்கு சிறப்பு அதிகாரம்' வழங்க வகை செய்யும் AFSPA குறித்த விவகாரமானது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் வரம்புக்கு உட்பட்டது என்று ராணுவத் தளபதி வி.கே.சிங் கூறியுள்ளார்.

காஷ்மீரில் ராணுவத்துக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை திரும்பப் பெறுவதற்கு ராணுவம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ராணுவத் தளபதி வி.கே.சிங்கிடம் இதுகுறித்து நிருபர்கள் கேட்டதற்கு, "இந்தச் சட்டம், மத்திய உள்துறை அமைச்சக வரம்புக்கு உட்பட்டது. அவர்கள் தான் இதுபற்றி விவாதித்து முடிவு செய்ய வேண்டும். எங்கள் தரப்பு விஷயங்கள் ஏற்கெனவே பகிரப்பட்டுவிட்டது. இதற்கு மேல் இதுபற்றி கருத்து கூற முடியாது," என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்