வெளியிடப்பட்ட நேரம்: 11:05 (21/05/2015)

கடைசி தொடர்பு:20:26 (22/05/2015)

நெடுஞ்சாலையில் வெற்றிகரமாக தரை இறங்கிய போர் விமானம்

ந்திய விமானப்படை, தன்னுடைய மிராஜ் 2000 போர் விமானத்தை இன்று வெற்றிகரமாக மதுரா அருகே உள்ள யமுனா எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலையில் தரை இறக்கியது. இது ரன்வே அல்ல, சாதாரண நெடுஞ்சாலைதான்.

வெளிநாடுகளில் போர்க் காலங்களில் அவசரத்துக்காக சாதாரண நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவார்கள். இதற்காக நெடுஞ்சாலையில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் ரன்வே போல அமைத்திருப்பார்கள். இந்தப் பகுதியில் விளக்குக் கம்பங்கள், செல்ஃபோன் டவர்கள் போன்றவை இருக்காது. சாலையும் பக்காவாக, ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் இருக்கும்.

ஏற்கெனவே சீனா, பாகிஸ்தான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இதுபோன்ற 'ரோடு ரன்வே'-க்கள் உள்ளன. இந்தியாவில் இப்போதுதான் முதல்முறையாக சோதனை செய்யப்படுகிறது. ஆக்ரா - லக்னோ நெடுஞ்சாலையில் இந்த ரோடு ரன்வே அமைய இருக்கிறது.

- ராஜா ராமமூர்த்தி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்