ஐபோனுக்காக அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய மாணவர்!

நியூயார்க்: ஐபோனை தர மறுத்த இந்திய மாணவர் ஒருவர் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் சாய் கிரண் (23). உயர் கல்வி படிப்பதற்காக ஒன்றரை மாதங்களுக்கு முன்பு சாய் கிரண்,  அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கு சென்றார்.

சம்பவத்தன்று கிரணிடம் இருந்த ஐபோனை தருமாறு அடையாளம் தெரியாத நபர் கேட்டிருக்கிறார். கிரண் தர மறுத்ததால், அந்த நபர் மாணவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.

மகன் இறந்த செய்தியை நண்பர்கள் மூலம் கேள்விப்பட்ட தந்தை ஹரி, கிரணின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசும், தெலங்கானா அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
 
கடந்த மாதம் 28 வயதான மலாவ் தேசாய் என்ற இந்தியர், இதே புளோரிடாவில் வழிப்பறி கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!