வெளியிடப்பட்ட நேரம்: 11:12 (15/07/2015)

கடைசி தொடர்பு:15:27 (15/07/2015)

பேரறிவாளன் உள்பட 3 பேர் விடுதலை எதிர்த்த வழக்கு: ஜூலை 21க்கு ஒத்திவைப்பு!

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிப்பதை எதிர்த்து, மத்திய அரசு தொடர்ந்த வழக்கு விசாரணையை வரும் 21ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒத்திவைத்தது.
 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, கருணை மனு மீதான தாமதத்தை காரணம் காட்டி கடந்த ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இதையடுத்து, தண்டனை அனுபவித்த காலத்தை கருத்தில் கொண்டு அவர்களை விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு விசாரணை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. சில மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட இந்த வழக்கு, தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா, பி.சி.கோஷ், யு.யு.லலித், ஏ.எம்.சப்ரே ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, "இந்த வழக்கில் இதற்கு முன்னர் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை தற்போதைக்கு மாற்ற விரும்பவில்லை. ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேர் விடுதலைக்கான தடையை நீக்க முடியாது. ஆயுள் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை" என்றனர்.

தமிழக அரசு தரப்பில், ஆயுள் கைதிகள் அதிலும் 20 வருடங்களுக்கு மேலாக சிறையில் அடைபட்டிருக்கும் ஆயுள் கைதிகளை விடுவிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரத்தை திருப்பியளிக்க வேண்டும் எனக் கோரினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 21ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் தெரிவித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்