Published:Updated:

டெல்லி: வீட்டுப்பாடம் செய்யாத 5 வயது மகள்... மொட்டைமாடியில் கொளுத்தும் வெயிலில் கட்டிப்போட்ட தாய்!

வீட்டுப்பாடம் செய்யாததால் நடந்த கொடுமை ( ட்விட்டர் )

டெல்லியில் வீட்டுப்பாடம் செய்யாததால், கொளுத்தும் வெயிலில் 5 வயது சிறுமியை வீட்டின் மொட்டைமாடியில் கட்டிவைத்துவிட்டுச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

டெல்லியில் ஒரு தாய், தன்னுடைய 5 வயது மகள் சரியாக வீட்டுப்பாடம் செய்யாததால், மொட்டைமாடியில், கொளுத்தும் வெயிலில் கை கால்களைக் கயிற்றால் கட்டிப்போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தச் சிறுமி தன்னை விடுவிக்குமாறு முணுமுணுப்பதும், அழுவதும் அந்த வீடியோவில் காட்டப்பட்டிருக்கிறது. உள்ளூரில் வசிக்கும் ஒருவர் இந்த வீடியோவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. இந்த வீடியோ இணையத்தில் பரவத் தொடங்கியதை அடுத்து, டெல்லி காவல்துறை, இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வீட்டுப்பாடம் செய்யாததால் நடந்த கொடுமை
வீட்டுப்பாடம் செய்யாததால் நடந்த கொடுமை
ட்விட்டர்

இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள், ``இந்த சிறுமி 1 -ம் வகுப்பு படிக்கிறார். டெல்லியின் கரவால் நகரில் உள்ள துக்மிர்பூரில் தனது குடும்பத்துடன் வசித்துவருகிறார்.இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்கள்.

இந்தத் தாயின் மனிதாபிமானமற்ற செயலுக்குப் பல்வேறு நபர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். ஆசிரியர்கள், பாதுகாவலர்கள் குழந்தைகளை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சித்திரவதை செய்வதைத் தடுக்க இந்திய அரசியலமைப்புச் சட்டம் பல சட்டங்களை வகுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism