ஆஹா அபாரம் புத்தர், குருநானக்,வரிசையில் 'பாலியல் வன்கொடுமை 'அசாராம் பாபு !

தொடர்ச்சியாக பாலியல் வழக்கில் சிக்கியுள்ள அசாராம் பாபு, இந்த தேசத்தின்  'புனிதர்' என்று ராஜஸ்தான் மாநில பள்ளி பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு, ராஜஸ்தானில் பள்ளி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் சாமியார் அசாராம் பாபு கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அதே மாநிலத்தில் பள்ளி பாடப்புத்தகத்தில் இந்தியாவின் மாகான்கள் வரிசையில் இடம் பெற்று சாதனை (?) படைத்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 3ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் அவரது படம் புத்தர், விவேகானந்தர், அன்னை தெரசா,ராமகிருஷ்ண பரமஹம்சர், குருநானக் ஆகியோருடன் இந்தியாவின் 'செயின்ட்ஸ்' என்ற பெயரில் இடம் பெற்றுள்ளது.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறுகையில், '' நாங்கள்  பிரிண்ட்டுக்கு அனுப்பும் போது அவர் மீது எந்த வழக்கும் கிடையாது. அதற்கு பின்தான் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் தற்போது அசராம் பாபுவை நீக்கி விட்டு புதிய புத்தகங்களை அச்சடித்து வழங்க முடிவு செய்துள்ளோம். சந்தையில் உள்ள அனைத்து புத்தகங்களையும் திரும்ப பெறவும் உத்தரவிட்டுள்ளோம் '' என்றனர்.

கடந்த 2013ஆம் ஆண்டு பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருந்து  வெளியே வந்த அசாராம் பாபு,  அதற்கு பின்னர் குஜராத்தில் 2 சகோதரரிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிக்கினார்.

இந்த வழக்கில் அசாராம் பாபுவின் மகன் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் முஷார்பர் நகரில் தனக்கு எதிராக சாட்சியம் அளித்த சமையல்காரர் ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கும் அசாராம் பாபு மீது உள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!