விரைவில் பெண் பைலட்டுகள் கையில் இந்திய போர் விமானங்கள்!

ந்திய போர் விமானங்களை இயக்கும் பணியில் விரைவில் பெண் பைலட்டுகள் நியமிக்கப்படுவார்கள் என்று விமானப்படைத் தலைவர் ஏர்மார்ஷல் அரூப்  ராகா தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படை உருவாக்கப்பட்ட 83வது ஆண்டு விழா நிகழ்ச்சி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள  ஹின்டன் விமானப்படைத் தளத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்ற இந்திய விமானப்படைத் தலைவர் ஏர் மார்ஷல் ஆரூப் ராகா பேசுகையில், '' தற்போது இந்திய விமானப்படையில் 94 பெண் பைலட்டுகள் பணியாற்றுகின்றனர். 14 பேர் நேவிகேட்டர்களாக உள்ளனர். விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள், சரக்கு ரக விமானங்களை இயக்கும் பணியில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.

இதில் சிலர் உலகிலேயே உயர்ந்த இடத்தில் உள்ள விமானப்படைத் தளமான லாடாக்கிற்கு ( 16,614 அடி) ஏன்.32 ரக விமானங்களை இயக்கிய அனுபவமுள்ளவர்கள்.  தற்போது முதல் முறையாக போர் விமானங்களில்  பெண்களை  பைலட்டுகளாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.''  என்றார்.

தற்போது இந்திய விமானப்படையில் 1500 பெண்கள் , நிர்வாகம், வழிகாட்டுபவர்கள் உள்ளிட்ட 7 பிரிவுகளில் பணியாற்றி வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!