சர்ச்சைக்குரிய கருத்து : வாட்ஸப் அட்மின் கைது | WhatsApp group admin along with 3 members arrested for objectionable content

வெளியிடப்பட்ட நேரம்: 14:03 (09/10/2015)

கடைசி தொடர்பு:17:46 (09/10/2015)

சர்ச்சைக்குரிய கருத்து : வாட்ஸப் அட்மின் கைது

ர்ச்சைக்குரிய கருத்தை பகிர்ந்ததாக மகாராஷ்ட்ராவில் வாட்ஸப் அட்மின் மற்றும் 3 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்ட்ர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில் சாகுர் பகுதியை சேர்ந்த சிவாஜி பார்கே ஒரு வாட்ஸப் குழுவின்  அட்மினாக இருந்துள்ளார். இவரது குழுவில் இருந்து சர்ச்சைக்குரிய கருத்து பகிரப்பட்டதாகத் தெரிகிறது. அது தொடர்பான வீடியோவும் பதிவேற்றியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து லத்தூர் போலீசார், இந்த குழுவின் அட்மினாக இருந்த சிவாஜி பார்கே, ராஜ்குமார் தெலாங்கே, அமோல் சோமன்வாசி, மனோஜ் ஆகியோரை கைது செய்தனர். ஆனால் அவர்கள் வெளியிட்ட கருத்து என்னவென்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

இவர்கள் மீது 2000ஆம் ஆண்டு தகவல் தொடர்பு சட்டம்153, 34 மற்றும்  67 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்