மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்கிறார் கர்நாடக அமைச்சர்!

பெங்களூரு: கர்நாடக மாநில குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்காக, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவது உறுதி என்று அம்மாநில அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனாலும், புதிய அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என்று கர்நாடக அரசு கூறி வருகிறது.

இந்நிலையில், இதுதொடர்பாக கர்நாடக அமைச்சர் பரமேஸ்வர் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''கர்நாடகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கடுமையான குடிநீர் பிரச்சினை நிலவுகிறது.

இந்த பிரச்னையை தீர்ப்பதற்காக காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மாநில அரசு முழுமையாக தன்னை ஈடுபடுத்தி செயலாற்றி வருகிறது. மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி. புதிய அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை நீர்ப்பாசனத்துறை மேற்கொண்டு வருகிறது" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!