வெளியிடப்பட்ட நேரம்: 18:39 (12/11/2015)

கடைசி தொடர்பு:18:45 (12/11/2015)

சினிமாவில் புற்று நோயாளிகள் இறப்பது போன்று காட்டுவது தவறு: நடிகை மனிஷா கொய்ராலா!

திருவனந்தபுரம்: சினிமாவில் புற்றுநோய் பாதித்த நோயாளிகள் இறப்பது போன்று காட்சிகள் அமைப்பது தவறு என்று நடிகை மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.

பிரபல ஹிந்தி நடிகையான மனிஷா கொய்ராலா தமிழில் பம்பாய்,இந்தியன்,முதல்வன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர்.இந்நிலையில், புற்று நோய் தாக்குதல் காரணமாக அவர் சில ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் ஓய்விலிருந்தார். தற்போது புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார். இதனையடுத்து அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.

மலையாள மொழியில் தயாராகிவரும்  இடவப்பாதி என்ற படத்தில் மனிஷா கொய்ராலா நடித்து வருகிறார். இதற்காக திருவனந்தபுரம் வந்திருந்த அவர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,

ஒரு செயலை செய்ய எனக்கு எந்த அளவிற்கு சுதந்திரம் உள்ளதோ அந்த அளவிற்கு  மற்றவருக்கும் சுதந்திரம் உள்ளது. இந்தியாவில் உள்ள அனைவரும் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் என்று கூறிடமுடியாது. எப்படி வாழவேண்டும் என்று யாரையும்  கட்டாயப்படுத்த முடியாது.அதற்கு யாருக்கும் உரிமை இல்லை.இந்தியர்கள் பெரிய கலாச்சாரத்தை பின்பற்றுபவர்கள்.அது இப்போதும் தொடருகிறது.

புற்று நோய் வந்தால் மரணம் உறுதி என்று பெரும்பாலானோர் கருதுகிறார்கள்.இது தவறு. சினிமாக்களில் புற்று நோயாளிகள் இறப்பது போன்று காட்டுவது தவறு. புற்று நோயைக் குணமாக்க வேண்டும் என்ற சிந்தனை  நமக்கு வேண்டும்" என்று கூறினார்.       

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்