Published:Updated:

தமிழக மீனவர்கள் 55 பேர் விடுதலை - இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

தமிழக மீனவர்கள் ( உ.பாண்டி )

இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 55 மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக மீனவர்கள் 55 பேர் விடுதலை - இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 55 மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Published:Updated:
தமிழக மீனவர்கள் ( உ.பாண்டி )

இலங்கை சிறையிலுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 55 மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 55 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். கடந்த டிசம்பர் மாதம், 18, 20 ஆகிய தேதிகளில் ராமேஸ்வரம் மற்றும் ஜெகதாபட்டினத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்றபோது, இலங்கை கடற்படையால் 55 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இது குறித்த வழக்கு இன்று இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 55 மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்வதாக அறிவித்தனர்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

முன்னதாக இன்று காலை தமிழக முதல்வர் ஸ்டாலின் இலங்கை அரசு, தமிழக மீனவர்களின் படகுகளை ஏலத்தில்விடும் முடிவை உடனடியாகக் கைவிட வலியுறுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism