ராகுல் காந்தி ஒரு பிரிட்டிஷ் பிரஜை: ஆவணங்களை வெளியிட்டு சுப்பிரமணியன் சுவாமி 'திடுக்' குற்றச்சாட்டு! | Subramanian swamy alleges Rahul Gandhi is a British national

வெளியிடப்பட்ட நேரம்: 16:35 (16/11/2015)

கடைசி தொடர்பு:17:16 (16/11/2015)

ராகுல் காந்தி ஒரு பிரிட்டிஷ் பிரஜை: ஆவணங்களை வெளியிட்டு சுப்பிரமணியன் சுவாமி 'திடுக்' குற்றச்சாட்டு!

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஒரு பிரிட்டிஷ் பிரஜை என்று பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ள சுப்பிரமணியன் சுவாமி, இது தொடர்பாக சில ஆவணங்களையும் வெளியிட்டுள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டி இந்த குற்றச்சாட்டைக் கூறிய பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி,  பிரிட்டனை சேர்ந்த Backops Limited  என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் செயலாளராக ராகுல் காந்தி பெயர் இடம்பெற்றுள்ளதாகவும், அந்த நிறுவனத்தின் வரவு செலவு கணக்கு ஆண்டறிக்கையில் ராகுல் காந்தி தன்னை ஒரு பிரிட்டிஷ் பிரஜை எனக் குறிப்பிட்டு, பிரிட்டன் பகுதியில் உள்ள ஒரு முகவரியை தெரிவித்துள்ளதாகவும் கூறி, அது தொடர்பான ஆவணங்களை வெளியிட்டார்.

மேலும் இது தொடர்பாக தாம் பிரதமர் மோடிக்கு ஆவண ஆதாரங்களுடன் கடிதம் எழுதி இருப்பதாகவும், இந்திய அரசியல் சாசனம், பிரிவு 9 ன் படி, ராகுல் சட்டவிரோதமாக பிரிட்டிஷ்  குடியுரிமை கொண்டிருப்பதால் அவரது எம்.பி. பதவியை பறிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளதாகவும் சுவாமி தெரிவித்தார்.

சுவாமி வெளியிட்ட ஆவணங்கள் கீழே....

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்