மதரசாக்களை விமர்சித்த கேரள பெண் பத்திரிகையாளரின் ஃபேஸ்புக் பக்கம் முடக்கம்!

தரசாக்களை விமர்சித்து பதிவிட்ட கேரள பெண் பத்திரிகையாளருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து அவரது ஃபேஸ்புக் பக்கம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கேரளா மாநிலம் கோழிக்கூட்டில்  இயங்கி வருகிறது பாரூக் கல்லூரி . இங்கு ஒரே வகுப்பில் படித்து வரும் மாணவ மாணவிகள் ஒரே வரிசையில் அமர்ந்திருந்தனர். இதையடுத்து வகுப்பறையை விட்டு வெளியேற்றப்பட்ட அவர்களை, பெற்றோர்களை அழைத்து வருமாறு கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது.

'இந்த  சம்பவம் முஸ்லிம் பெண்கள் சந்தித்து வரும் பல்வேறு அநீதிகளில் ஒன்று' என, கேரளத்தை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் வி.பி.ரஜீனா, தனது  ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

அதோடு தாம் சிறுவயதில், கோழிக்கோட்டில்  சன்னி மதராசா ஒன்றில்  பயின்ற காலத்தில் அதன் ஆசிரியர்கள், தங்களிடம் ஒழுக்கமற்ற முறையில் நடந்து கொண்டதாகவும் ரஜீனா  அதில் விமர்சித்திருந்தார்.

ரஜீனாவின் இந்த கருத்தையடுத்து அவருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து ஃபேஸ்புக் நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து ரஜீனாவின் பக்கம் முடக்கப்பட்டது. ஆனாலும் ரஜீனா தனது தரப்பு நியாயங்களை கூறி, அவரது ஃபேஸ்புக் பக்கத்தை மீண்டும் பெற்றார். எனினும் மீண்டும் ஒரு முறை புகாரளிக்கப்பட்டதையடுத்து ஃபேஸ்புக் பக்க ரஜீனாவின் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரஜீனா கூறுகையில் , "மதரசாக்கள் குறித்து நான் பதிவிட்டதற்காக மதத்தின் மீது தொடுத்த தாக்குதல் என்றும், குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் என்னவென்றும் என்னிடம் கேள்வி கேட்டனர். நான் எனது பதிவில் ஆதங்கத்தை மட்டும்தான் வெளிப்படுத்தியிருந்தேன். இஸ்லாமிய பெண்கள் தாங்கள் அனுபவிக்கும் துன்பங்களை பகிர்ந்து கொள்ள முடியாத சூழலியே வாழ்கின்றனர். பல ஆண்டு காலமாக எனது மனதுக்குள் இருந்த கோபம் இப்படி வெளிப்பட்டுள்ளது. அதோடு ஒரு பெண், தனது கருத்தை தெரிவித்தால், அவர்களால் அதனை தாங்கிக் கொள்ள முடியவில்லை'' என்றார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!