மது, சிகரெட் குடிக்கிறீங்களா...? 'பாவ வரி ' கட்டத் தயாராகுங்க!

து, புகை பழக்கமுள்ளவர்களிடம் இருந்து 'பாவ வரி' என்ற பெயரில் புதிய வரியை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் மது, புகை பழக்கம் சமுதாயத்துக்கு விரோதமான செயலாக பார்க்கப்படுகிறது. இதுபோன்ற மோசமான பழக்கவழக்கங்களில் இருந்து மக்களை விடுவிக்கும் வகையில், இப்படி ஒரு வரி விதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் 'பாவ வரி ' விதிக்க பாரதிய ஜனதா அரசு மட்டுமே முயலவில்லை.

இதற்கு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசும் முடிவு செய்து விவாதித்து வந்தது. ஆனால் தற்போதைய பிரதமர் மோடி தலைமையிலான அரசு   'பாவ வரி'யை கொண்டு வர, தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் பொருளாதார நடவடிக்கைகள் குழுவின் தலைவர் நரீந்தர தனேஜா கூறுகையில், ''மது மற்றும் புகைப்பழக்கத்தினால் அதிகரித்து வரும் மரணங்களை கட்டுப்படுத்தவும் மருத்துவ செலவினங்களை குறைக்கவும்,  மக்களை அந்த பழக்கத்தில் இருந்து விடுவிக்கவுமே இந்த புதிய வரி விதிப்பை கொண்டு வரும் முடவெடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

'பாவ வரி' விதிப்பது தொடர்பான நடவடிக்கைகளை மத்திய நிதி அமைச்சகமும் தொடங்கி விட்டது. இது தொடர்பாக பல்வேறு தொழில் நிறுவனங்கள், நிபுணர்கள், பொதுமக்களிடையே நிதி அமைச்சகம் கருத்து கேட்டுள்ளது.  இறுதியாக 'பாவவரி' தொடர்பான அறிக்கை தயார் செய்யப்பட்டு, தேசிய வளர்ச்சி கவுன்சிலுக்கு அனுப்பப்பட்டு,   பின்னர் சட்டமாக இயற்றப்படும் என கூறப்படுகிறது. 

ஏற்கனவே சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், ஜப்பான்,நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் 'பாவ வரி' நடைமுறையில் உள்ளது. 

கடந்த செப்டம்பர் மாதம் மகராஷ்ட்ராவில் 'வறட்சி வரி ' என்று புதியதாக வரி விதிக்கப்பட்டது. அதன்படி மது, சிகரெட் போன்றவற்றில் 5 சதவீத வாட் வரி அதிகரிக்கப்பட்டது. இதில் கிடைத்த நிதியை கொண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!