தமிழகத்தில் மழையால் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம்: பிரதமர் அறிவிப்பு! | TN Rain flood: PM Modi announces Rs 2 lakh for kin of those killed

வெளியிடப்பட்ட நேரம்: 18:56 (05/12/2015)

கடைசி தொடர்பு:19:22 (05/12/2015)

தமிழகத்தில் மழையால் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம்: பிரதமர் அறிவிப்பு!

புதுடெல்லி: தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

சுமார் இரு வாரங்களுக்கு முன்பு தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

இதையடுத்து, சற்று மழை நின்றிருந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன் மீண்டும் பெய்த கனமழை காரணமாக அந்தப் பகுதிகளில் மீண்டும்  வெள்ளம் ஏற்பட்டது. 

இதேபோல், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள் உள்பட பல்வேறு பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த வெள்ள பாதிப்பாதிப்புகளால் தமிழகத்தில் 315க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்.

இந்நிலையில், தமிழகத்தில் கனமழைக்கு பலியானோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்