Published:Updated:

`இனி ஒன்றாக வாழப்போகிறோம்!' - 56 வயது IAS அதிகாரியை காதல் திருமணம் செய்யும் 57 வயது பத்திரிகையாளர்

Marriage (Representational Image)

``நாங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம், இந்தக் காலகட்டத்தில் நாங்கள் இருவரும் ஒரே மாதிரியான எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளோம். செய்தி விவாதங்களின் போது அடிக்கடி சந்திப்போம். இப்போது நாங்கள் ஒன்றாக வாழ முடிவு செய்துள்ளோம்."

`இனி ஒன்றாக வாழப்போகிறோம்!' - 56 வயது IAS அதிகாரியை காதல் திருமணம் செய்யும் 57 வயது பத்திரிகையாளர்

``நாங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம், இந்தக் காலகட்டத்தில் நாங்கள் இருவரும் ஒரே மாதிரியான எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளோம். செய்தி விவாதங்களின் போது அடிக்கடி சந்திப்போம். இப்போது நாங்கள் ஒன்றாக வாழ முடிவு செய்துள்ளோம்."

Published:Updated:
Marriage (Representational Image)

56 வயதான ஷைல்பாலா மார்ட்டின் (Shailbala Martin) தனியாக வாழ்ந்து வருகிறார். ஐஏஎஸ் அதிகாரியான இவர் மத்தியப் பிரதேச அரசின் பொது நிர்வாகத் துறையில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 57 வயதான மூத்த பத்திரிகையாளர் ராகேஷ் பதக்குடன் (Rakesh Pathak) விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

ராகேஷ் பதக்
ராகேஷ் பதக்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மூத்த பத்திரிகையாளரான ராகேஷ் பதக், குவாலியர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தன் மனைவியை இழந்த இவருக்கு சௌமியா மற்றும் சச்சி என இரண்டு மகள்கள் உள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஷைல்பாலா இந்தூரில் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார். 2009-ம் ஆண்டில் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றிய ஷைல்பாலா தனியாகவே வாழ்ந்து வந்துள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பு இவருக்கும் ராகேஷுக்கும் காதல் மலர்ந்துள்ளது. குடும்ப நிகழ்வொன்றில் ஷைல்பாலாவை அவரின் மகள்கள் மற்றும் குடும்பத்துக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். அவரை அனைவரும் அன்போடு வரவேற்றுள்ளனர். அதைத்தொடர்ந்து, ``இப்போது எங்கள் உறவை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம்" என ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் ராகேஷ் பதக்.

ஷைல்பாலா மார்ட்டின்
ஷைல்பாலா மார்ட்டின்

அவருடைய ஃபேஸ்புக் பதிவில், ``நாங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம், இந்தக் காலகட்டத்தில் நாங்கள் இருவரும் ஒரே மாதிரியான எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளோம். செய்தி விவாதங்களின்போது அடிக்கடி சந்திப்போம். இப்போது நாங்கள் ஒன்றாக வாழ முடிவு செய்துள்ளோம். எனவே, நாங்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போகிறோம்" எனப் பதிவிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism