இந்தியாவில் 80 சதவீதம் பெண்களுக்கு வங்கி கணக்கு இல்லை: ஐ.நா. தகவல்!

புதுடெல்லி: இந்தியாவில் 80 சதவீதம் பெண்களுக்கு வங்கி கணக்குகள் இல்லை என்று ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்ட அறிக்கை தெரிவித்து உள்ளது.

மனிதவள மேம்பாட்டு குறியீடு தரவரிசை குறித்த அறிக்கை ஒன்றினை ஐ.நா.வின் வளர்ச்சி திட்டம் ஆணையம் வெளியிட்டு உள்ளது. அதில், உலக அளவில் வாழ்க்கை தரம், சராசரி ஆயுட்காலம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து தரவரிசை பட்டியல் உள்ளது.

மேலும், அந்த அறிக்கையில் குறிப்பாக உலக அளவில் பல்வேறு நாடுகளில் நிலவி வரும் பாலின சமத்துவம் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன், கூலியில்லா உழைப்பால் ஆண்களைவிட பெண்கள் அதிக அளவில் சுரண்டப்படுகிறார்கள். 39 சதவீதம் பெண்களின் உழைப்பிற்கு வருமானம் கிடைப்பதில்லை. இந்தியாவில் 10 சதவீதம் இளைஞர்கள் வேலை வாய்ப்பில்லாமல் உள்ளனர்.

இந்தியா, பாகிஸ்தான், மெக்ஸிகோ, உகாண்டா உள்ளிட்ட 38 நாடுகளில் 80 சதவீதம் பெண்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை. ஆனால் ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் 90 சதவீதத்திற்கு அதிகமாக பெண்கள் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!