வட மாநிலங்களில் கடும் குளிர்: 25 ரயில்கள் ரத்து! | Severe cold weather in northern states: 35 trains canceled

வெளியிடப்பட்ட நேரம்: 11:31 (22/01/2016)

கடைசி தொடர்பு:12:46 (22/01/2016)

வட மாநிலங்களில் கடும் குளிர்: 25 ரயில்கள் ரத்து!

புதுடெல்லி: வட மாநிலங்களில் நிலவும் கடும் குளிர் காரணமாக 35 ரயில்களை வடக்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக காலை நேரத்தில் கடும் குளிரும், அடர்ந்த பனி மூட்டமும் நிலவி வருகிறது. இன்று காலையும் இதேபோல கடும் பனிமூட்டம் நிலவியது. காலை 5.30 மணியளவில் 200 மீட்டர் தூரத்தில் உள்ள பொருட்களையே மக்களால் காண முடிந்தது. இந்த பனிமூட்டத்தால் சாலை போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது.

மேலும், ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிப்படைந்தது. வட மாநிலங்களில் நிலவும் கடும் குளிர் மற்றும் அடர்பனிமூட்டம் காரணமாக 25 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது. டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய 14 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. டெல்லிக்கு பல ரெயில்கள் தாமதமாக வந்து சேர்ந்தன. இதனால், ரயில் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்