தாயின் உடலுக்கு நடனம் ஆடி அஞ்சலி செலுத்திய மகள்; மிருணாளினி சாராபாய் இறப்பில் உருக்கம்! | Malliga sarabai pay her tribute to her mother mirunalini with dance!

வெளியிடப்பட்ட நேரம்: 17:18 (22/01/2016)

கடைசி தொடர்பு:18:08 (22/01/2016)

தாயின் உடலுக்கு நடனம் ஆடி அஞ்சலி செலுத்திய மகள்; மிருணாளினி சாராபாய் இறப்பில் உருக்கம்!

ஆமதாபாத்: பிரபல நடனக் கலைஞர் மிருணாளினி சாராபாய் உடலுக்கு அவரது மகள் மல்லிகா சாராபாய் நடனம் ஆடி அஞ்சலி செலுத்தினார்.

பிரபல நடனக் கலைஞரும், மறைந்த விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் மனைவியுமான மிருணாளினி சாராபாய், குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் நேற்று மரணம் அடைந்தார்.  97 வயதான அவர், உடல் நலக்குறைவின் காரணமாக நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட மிருணாளினி சாராபாய், சிறிது நேரத்தில் மரணமடைந்தார்.

சென்னையில் பிறந்த மிருணாளினி சாராபாய் பரதநாட்டியம், கதகளி ஆகியவற்றில் சிறந்த தேர்ச்சி பெற்றவர். மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷண் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்ற அவருக்கு மல்லிகா சாராபாய் என்ற மகளும், கார்த்திகேய சாராபாய் என்ற  மகனும் உள்ளனர்.

தாயைப் போலவே தேர்ந்த நடனக்கலைஞரான மல்லிகா சாராபாய்,  தன் தாயின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் பொருட்டு, அவரது உடலருகே நடனம் ஆடி அஞ்சலி செலுத்தினார். அந்தக்காட்சி உருக்கமாய் இருந்தது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்