சாலை விபத்தில் மகன் பலி... விபத்தை தடுக்க சாலையை சீரமைக்கும் தந்தை!

மும்பை: சாலை விபத்தில் தனது மகனை இழந்த தந்தை ஒருவர், விபத்துக்களைத் தடுக்கும் நோக்கில் மும்பையில் உள்ள சாலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

மும்பையை சேர்ந்த தாதாபாய் பில்ஹோர் என்பவரின் 16 வயது மகன், சமீபத்தில் சாலை விபத்து ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பின் நடந்த விசாரணையில், சாலையில் இருந்த பள்ளம்தான் விபத்துக்குக் காரணம் என தெரிய வந்திருக்கிறது.

இதை தொடர்ந்து, தனது மகனைப் போல், வேறு யாரும் விபத்தில் சிக்கக் கூடாது என்று மும்பை சாலைகளில் உள்ள பள்ளங்களைத் தேடித் தேடி, அவற்றை சீரமைக்கும் பணியில் தாதாபாய் பில்ஹோர் தற்போது ஈடுபட்டு வருகிறார்.  எனும் உயர்ந்த நோக்கில், இப்பணியை அவர் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

இது குறித்து தாதாபாய் பில்ஹோர் கூறும்போது, ''எனது மகன் சாலையில் இருந்த பள்ளத்தின் காரணமாக உயிரிழக்க நேர்ந்துள்ளது. இது என்னை மிகவும் பாதித்தது. அதனால், மும்பையில் சாலைகளில் உள்ள பள்ளங்களை சீர் செய்து வருகிறேன். மேலும், எனது இந்த உன்னத முயற்சிக்கு நண்பர்கள், உறவினர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்து வருவதுடன், என்னுடன் சேர்ந்து சாலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்" என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!