வெளியிடப்பட்ட நேரம்: 12:09 (10/02/2016)

கடைசி தொடர்பு:12:41 (10/02/2016)

முதல்வர் மனைவிக்கு சாமியார் அளித்த மந்திர நெக்லஸ்: கிளம்பும் சர்ச்சை!

மும்பை: மகாராஷ்ட்ர மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவிக்கு, சாமியார் ஒருவர் மந்திரத்தில் நெக்லஸ் வரவழைத்துக் கொடுத்தது தற்போது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்ட்ர மாநிலம் புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் பட்ன்ச்ச்விஸ் மனைவியும், வங்கி அதிகாரியுமான அம்ருதாவுக்கு, அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குருவானந்தா என்ற சாமியார், மந்திரம் செய்து காற்றில் இருந்து நெக்லஸ் ஒன்றை வரவழைத்துக் கொடுத்தார். அதை, முதல்வர் மனைவி அம்ருதாவும் மிக பயபக்தியுடன் சாமியாரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

இந்த செய்தி தற்போது ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவ, சர்ச்சை கிளம்பி உள்ளது. காரணம், அம்மாநிலத்தில் மூட நம்பிக்கைகளை ஒழிக்க சட்டமே இயற்றப்பட்டுள்ளது என்பதுதான்.

மூட நம்பிக்கைகளை ஒழிக்க மாநிலத்தில் சட்டமே இயற்றப்பட்டு உள்ள நிலையில், முதல்வரின் மனைவி மந்திரத்தில் வரவழைக்கப்பட்ட நெக்லஸை வாங்கலாமா? இதற்காக, பட்னாவிஸ் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்க ஆரம்பித்து உள்ளன. ஆனால், "பெரியவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பது எங்கள் வழக்கம், அதை நான் தொடருவேன்" என்று முதல்வர் மனைவி அம்ருதா பதிலடி கொடுத்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்