வெளியிடப்பட்ட நேரம்: 12:44 (14/02/2016)

கடைசி தொடர்பு:13:03 (14/02/2016)

சுனந்தா புஷ்கர் மரணம் : சசி தரூரிடம் டெல்லி போலீஸ் 5 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை!

டந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி  சசிதரூரின் 51 வயது மனைவி சுனந்தா புஷ்கர், டெல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். பாகிஸ்தான் பத்திரிகையாளர் மெகர் தராருடன் சசி தரூருக்கு தொடர்பு இருந்தாகவும், இது தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக சுனந்தா தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

சுனந்தா' பொலோனியம் 'என்ற காற்றில் கரைந்து மரணத்தை விளைவிக்கக் கூடிய பொலோனியம் என்ற கதிரியக்க பொருளால் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவியது.  எனவே கடந்த 2015ஆம் ஆண்டு,  பிப்ரவரி மாதம் சுனந்தாவின் உள்ளுறுப்புகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் வாஷிங்டன் நகரில்  எப்.பி.ஐ.யின்  ஆய்வகத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

அதில் இருந்து கிடைத்த அறிக்கையின் அடிப்படையில் சுனந்தா புஷ்கரின் மரணம் இயற்கையானது அல்ல . அதேவேளையில் காற்றில் கரைந்து மரணத்தை ஏற்படுத்தும்  தன்மையுடைய  'பொலோனியம்' என்ற கதிர்வீச்சு பொருளின் தாக்கம்அவரது உடல் உறுப்புகளில் இல்லை '' என்று டெல்லி போலீஸ் கமிஷனர் அண்மையில் பி.எஸ். பாசி தெரிவித்திருந்தார்.

சுனந்தா கவலை மற்றும் பதற்றத்தை குறைக்க பயன்படும் 'அப்பரக்ஸ்' மாத்திரையை அதிகப்படியாக உண்டதால் இறந்துள்ளதாக எப்.பி.ஐ. அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சுனந்தா மரணம் தொடர்பாக ஏற்கனவே சசி தரூரின் உதவியாளர் நாராயண் சிங், ஓட்டுநர்கள் பஞ்ரங்சி, சஞ்சய் தீவான்  சசி தரூர் ,சுனந்தாவின் இரு நண்பர்கள்  உள்ளிட்ட 6 பேரிடம் ஏற்கனவே உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.


இதற்கிடையே சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பாக சசி தரூரை நேற்று டெல்லி போலீஸ் விசாரணைக்கு அழைத்தது. மூத்த போலீஸ் அதிகாரிகள் சிலர்,சசி தரூரிடம் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக கிடுக்கிப்பிடி விசாணை நடத்தினர். இருவருக்குள்ளும் சுமூக உறவு நிலவியதா?  பாகிஸ்தான் பெண் பத்திரிகைளாயரிடம் உங்களுக்கு உள்ள உறவு எப்படிபட்டது? என்றெல்லாம் விசாரணை நடத்தப்பட்டது.

இது குறித்து டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ். பாஷி கூறுகையில், ''சசி தரூடன் மேற்கொள்ளப்பட்ட விசாரணையும் அவர் அளித்த பதில்களையும் இந்த சம்பவத்துடன் பொருத்தி பார்க்கப்படும். தேவைப்பட்டால், மேலும் அவர் விசாரணைக்கு அழைக்கப்படுவார்'' என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்