Published:Updated:

`6 முதல் 10 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர்’ - இந்திய ராணுவம் தாக்குதல் குறித்து பிபின் ராவத்!

ஜம்மு - காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதற்கு பிறகு, மாநிலத்தில் நல்லிணக்கம் மற்றும் அமைதியை சீர்குலைக்கும் வகையில் எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர்.

பிபின் ராவத்
பிபின் ராவத்

காஷ்மீரில் வன்முறையை நிகழ்த்த திட்டமிட்ட பாகிஸ்தான், அதற்காக பயங்கரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவ திட்டம் வகுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, எல்லையில் போர் நிறுத்த விதிமுறைகளை மீறி பாகிஸ்தான் ராணுவம் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் தங்கார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 2 இந்திய வீரர்களும், குடிமக்களில் ஒருவரும் உயிரிழந்தனர்.

இந்திய ராணுவம்
இந்திய ராணுவம்

மேலும் சிலர் படுகாயமடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குட்பட்ட பகுதியில் இன்று தாக்குதல் நடத்தியது. தாங்தார் செக்டார் அருகேயுள்ள 3 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் 2 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், ராணுவ தளபதி பிபிவின் ராவத் பேசுகையில், ``ஜம்மு - காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதற்கு பிறகு, மாநிலத்தில் நல்லிணக்கம் மற்றும் அமைதியை சீர்குலைக்கும் வகையில் எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர். பள்ளத்தாக்குகளில் நிலைமை இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது. ஆனால், பயங்கரவாதிகளுக்கு பின்னால் யாரோ ஒருவர் தூண்டுதலாக இருக்கிறார்.

பிபின் ராவத்
பிபின் ராவத்

பாகிஸ்தான் மற்றும் எல்லையில் சமூகமான நிலையை சீர்குலைப்பதற்காகவே இவர்கள் செயல்பட்டு வருகின்றனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து பீரங்கி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. பயங்கரவாதிகளின் கட்டமைப்புகளும் அழிக்கப்பட்டன. இதில் மூன்று முகாம்கள் அழிக்கப்பட்டது. ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அத்துடன் 6 முதல் 10 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்’’ என்றார்.