Published:Updated:

பட்டியலினச் சகோதரிகள் கொலை: பாலியல் வன்கொடுமை செய்தும் திருமணத்துக்கு மறுத்த சிறுமிகள்; 6 பேர் கைது!

சஞ்சீவ் சுமன்

உத்தரப்பிரதேசத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த இரு மைனர் சகோதரிகள் கொலைசெய்யப்பட்டது தொடர்பாக ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பட்டியலினச் சகோதரிகள் கொலை: பாலியல் வன்கொடுமை செய்தும் திருமணத்துக்கு மறுத்த சிறுமிகள்; 6 பேர் கைது!

உத்தரப்பிரதேசத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த இரு மைனர் சகோதரிகள் கொலைசெய்யப்பட்டது தொடர்பாக ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Published:Updated:
சஞ்சீவ் சுமன்

உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரி என்ற இடத்தில் 17, 15 வயது பட்டியலின மைனர் சகோதரிகள் நேற்று மாலை மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். அவர்களைச் சிலர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்ததாக சிறுமிகளின் தாயார் புகார் அளித்தார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவந்த நிலையில் இந்தக் கொலை தொடர்பாக ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சுஹைல் என்பவரும், அவரின் கூட்டாளி ஜுனைத்தும் சேர்ந்து சிறுமிகளைக் கரும்பு காட்டுக்குள் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அவர்களிடம் தங்களைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதாகத் தெரிகிறது. ஆனால் சிறுமிகள் இருவரும் திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளனர். இதனால் கோபத்தில் சுஹைல், ஜுனைத், ரஹ்மான், ஹபிசுல் ஆகியோர் சேர்ந்து இரண்டு பேரையும் துப்பட்டாவைப் பயன்படுத்தி கழுத்தை நெரித்துக் கொலைசெய்துள்ளனர்.

போலீஸார்
போலீஸார்

அதன் பிறகு அங்கு கமரிதுன், ஆரிப் ஆகியோரும் வந்துள்ளனர். கொலையை மறைக்க இருவரும் உதவிசெய்துள்ளனர். இந்தக் கொலை குறித்து மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் சஞ்சீவ் சுமன் அளித்த பேட்டியில், ``சிறுமிகள் இருவரும் சுஹைல், ஜுனைத்துக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்கள். சிறுமிகள் தாங்களாகத்தான் இருவருடனும் பைக்கில் சென்றுள்ளனர். அவர்களைக் கரும்பு காட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த பிறகு திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டுள்ளனர். ஆனால் திருமணத்துக்கு மறுத்ததால் நான்கு பேர் சேர்ந்து துப்பட்டாவால் கொலைசெய்து தற்கொலை போன்று காட்டு மரத்தில் தொங்கவிட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட அனைவரும் பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் ஐந்து பேர் நேற்று இரவே கைதுசெய்யப்பட்டுவிட்டனர். ஒருவர் இன்று காலை துப்பாக்கிச்சூடு நடத்தி கைதுசெய்யப்பட்டார்” என்று தெரிவித்தார்.