Published:Updated:

பீகார்: நூடுல்ஸ் தொழிற்சாலையில் வெடித்துச் சிதறிய கொதிகலன்; 6 பேர் பலி, 10-க்கும் மேற்பட்டோர் காயம்!

வெடித்துச் சிதறிய கொதிகலன்
News
வெடித்துச் சிதறிய கொதிகலன்

சுமார் 10 மணியளவில் தொழிற்சாலையின் மிகப் பெரிய கொதிகலன் ஒன்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல, தொழிலாளர்கள் நூடுல்ஸ் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, சுமார் 10 மணியளவில் தொழிற்சாலையின் மிகப் பெரிய கொதிகலன் ஒன்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்துக்குக் கொதிகலன் வெடித்த சத்தம் கேட்டதாகக் கூறப்படுகிறது. விபத்து தொடர்பாகத் தகவலறிந்து விரைந்த முசாபர்பூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில், 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் அருகிலிருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெடித்துச் சிதறிய கொதிகலன்
வெடித்துச் சிதறிய கொதிகலன்

100-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்ததாகக் கூறப்படுவதால், நூடுல்ஸ் தொழிற்சாலையில் தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. மேலும், நூடுல்ஸ் தொழிற்சாலையில் வெடித்த சிதறிய கொதிகலனால் , அருகிலிருந்த தொழிற்சாலைகளும் இடிந்து விழுந்து, அங்கு பணிபுரிந்து கொண்டிருந்தவர்களும் காயமடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வெடித்துச் சிதறிய கொதிகலன்
வெடித்துச் சிதறிய கொதிகலன்

நூடுல்ஸ் தொழிற்சாலையில் மீட்புப் பணி தொடர்ந்து வரும் நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். விபத்து நிகழ்ந்த பகுதியைப் பார்வையிட்ட முசாபர்பூர் நகரின் மூத்த காவல் அதிகாரி ஜெயந் காந்த், ``இதுவரை 6 பேர் உடல்களை மீட்டிருக்கிறோம். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர். மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது" என்றார்.