Published:Updated:

அஸ்ஸாம் - மேகாலயா எல்லையில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி... இணைய சேவை துண்டிப்பு - தொடரும் பதற்றம்!

அஸ்ஸாம் - மேகாலயா எல்லையில் துப்பாக்கிச் சூடு ( ட்விட்டர் )

மீண்டும் அஸ்ஸாம் - மேகாலயா எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது?

அஸ்ஸாம் - மேகாலயா எல்லையில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி... இணைய சேவை துண்டிப்பு - தொடரும் பதற்றம்!

மீண்டும் அஸ்ஸாம் - மேகாலயா எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது?

Published:Updated:
அஸ்ஸாம் - மேகாலயா எல்லையில் துப்பாக்கிச் சூடு ( ட்விட்டர் )

1972-ம் ஆண்டு அஸ்ஸாமில் இருந்து மேகாலயா பிரிக்கப்பட்டது. அப்போதிலிருந்து இரு மாநிலங்களுக்கிடையே மோதல் போக்கு நீடித்துவருகிறது. இந்த நிலையில், அஸ்ஸாம் மற்றும் மேகலாய மாநில எல்லை பிரச்னையை தீர்ப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் மேகாலயா இணை அமைச்சர் கான்ராட் சங்மா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். எல்லைப் பிரச்னை பேசி உடன்பாடு ஏற்பட்டதில் 70 சதவிகித பிரச்னை தீர்ந்துவிட்டதாக அமித் ஷா பெருமிதம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது மீண்டும் அஸ்ஸாம் - மேகாலயா எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அஸ்ஸாம் - மேகாலயா எல்லையில் மரக்கட்டைகளுடன் லாரி ஒன்று சென்றிருக்கிறது. இதனை அஸ்ஸாம் வனத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்த முயன்றிருக்கின்றனர். அதற்காக லாரியின் டயரில் சுட்டிருக்கிறார்கள்.

இதனால் பதற்றமடைந்த லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பித்து ஓட முற்சித்த நேரத்தில், அஸ்ஸாம் அதிகாரிகள் லாரியில் இருந்த 3 பேரை சிறைபிடித்திருக்கிறார்கள். இந்த நிலையில், மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த கிராம வாசிகள் அஸ்ஸாம் அதிகாரிகளை சூழ்ந்து கொண்டதால் பரபரப்பு நிலவியது.

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த் பிஸ்வா சர்மா
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த் பிஸ்வா சர்மா
ட்விட்டர்

இதனால் கலவரம் வெடித்ததால், அஸ்ஸாம் அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த பதற்ற சூழலை கட்டுக்குள் கொண்டுவர அஸ்ஸாம் - மேகாலயா எல்லையில் 48 மணி நேரம் இணைய இணைப்பு துண்டிக்கப் பட்டிருக்கிறது. ஆனாலும், அந்தப் பகுதியில் பதற்றம் இன்னும் குறையவில்லை எனக் கூறப்படுகிறது.