காதல் தோல்வியால் நடிகை தற்கொலை:மும்பையில் சோகம்

மும்பை: காதல் தோல்வியால் விரக்தி அடைந்த மும்பை நடிகை,  தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது மும்பையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பையில்  அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தவர் டி.வி. நடிகை பிரதியுஷா பானர்ஜி. 24 வயதான இவர்,  ‘பாலிகா வது’, ‘ஹம் ஹெய்னா’ ‘ஆகட்’ உள்ளிட்ட ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இந்நிலையில், பிரதியுஷா நேற்று (வெள்ளி) இரவு 7 மணியளவில் திடீரென அவர் வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டுக்  கொண்டார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பிரதியுஷா பானர்ஜி குடும்பத்தினர்,  உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக்  கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள்,  பிரதியுஷா இறந்ததை உறுதி செய்தனர்.

பின்னர், நடிகை பிரதியுஷா பானர்ஜி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், காதல் தோல்வி காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பான போலீசார் விசாரணை தொடருகிறது.

சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகர், நடிகைகள் மத்தியில் தற்கொலை சம்பவங்கள் தொடர்கதையாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!