லண்டனில் தன்னை தானே பார்த்து வியந்த மோடி (வைரல் வீடியோ)

 

லண்டன் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட தனது மெழுகுச்சிலையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டுள்ளார்.

லண்டன் செல்லும் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் இடங்களில் ஒன்றாக அங்குள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம் விளங்குகிறது. இங்கு தான் உலக தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் மெழுகு சிலைகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த வரிசையில் இந்திய பிரதமர் மோடியும் இடம்பெற்றுள்ளார்.

மோடியின் மெழுகு சிலை தயாரிப்பு பணி நிறைவு பெற்றதையடுத்து, இந்த சிலை ஏப்ரல் 28ம் தேதி பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட உள்ளது. இதற்கான திறப்பு விழாவில் மோடி கலந்து கொள்ளவில்லை. இதனால் மெழுகுச்சிலை அவருக்கு காண்பிக்கப்பட்டது. தன்னைப் போலவே காட்சியளிக்கும் அந்த சிலையை பிரதமர் மோடி வியந்து பார்த்தார்.அசாதாரண வேலை செய்துள்ளதாக மெழுகுச்சிலை தயாரித்த மேடம் டுசாட்ஸ் குழுவினரை பாராட்டிய பிரதமர் மோடி, கடவுள் பிரம்மா செய்யும் பணியை அந்த கலைஞர்கள் செய்து வருவதாக நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!