கேரள தலித் மாணவி பாலியல் கொலை: முக்கிய குற்றவாளி கைது! | Main suspect in rape, murder of Kerala Dalit woman, arrested by police

வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (16/06/2016)

கடைசி தொடர்பு:13:59 (16/06/2016)

கேரள தலித் மாணவி பாலியல் கொலை: முக்கிய குற்றவாளி கைது!

கேரள மாநிலம், பெரும்பாவூரில் தலித் மாணவி ஜிஷா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
 
 
சம்பவம் நடந்து ஒன்றரை மாதங்களுக்கு பிறகு,  குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபரை கேரள போலீசார் பிடித்துள்ளனர். பாலக்காடு அருகே,  கேரள - தமிழ்நாடு எல்லைப் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் பதுங்கியிருந்த அந்த நபரை போலீசார் பிடித்துள்ளனர். தற்போது அவரிடம் ரகசிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  முதல் கட்ட விசாரணையில் அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. 
 
இந்த தகவலை, கேரள முதல்வர் பினராயி விஜயனும் உறுதி செய்துள்ளார். குற்றவாளி குறித்த அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 
 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்