வெளியிடப்பட்ட நேரம்: 15:42 (25/06/2016)

கடைசி தொடர்பு:16:17 (25/06/2016)

சுகாய் 30 ரக விமானத்தில் இருந்து பிரமோஸ் ஏவுகணையை ஏவும் முயற்சி வெற்றி!

ந்திய விமானப் படையின் நவீன  பிரம்மோஸ் ஏவுகணையை, சுகாய்-30 ரக விமானத்தில் இருந்து ஏவும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது.

விமானப்படை இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , '' இந்திய ராணுவ பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம், பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்புக் குழு ஆகியவை இணைந்து, இந்த சோதனையை நாசிக் நகரில் நடத்தின.

விமானப்படையின் போர் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன், பிரம்மோஸ் ஏவுகணையை போர் விமானங்களில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பல கட்டங்களாக  சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது '' என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச அளவில் மிகவும் சக்திவாய்ந்த சூப்பர்சானிக் ஏவுகணையான பிரம்மோஸை,  சுகாய்-30 ரக போர் விமானத்தில் இணைப்பதன் மூலம், உலகின் தலைசிறந்த போர் விமானத்தைக் கொண்ட ராணுவமாக இந்திய விமானப்படை உருவெடுக்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்