எருமை பாலைவிட 3 மடங்கு புரதம்... சந்தைக்கு வரப்போகும் கரப்பான் பூச்சி பால்!

கொஞ்சம் ஜீரணிக்க முடியாத செய்திதான்... மன்னிக்கவும் உணவுதான்!. ஆனால் இது முற்றிலும் உண்மை. பெங்களூரில் உள்ள ஸ்டெம் செல் பயாலஜி இன்ஸ்டியூட்டைச் சேர்ந்த சர்வதேச விஞ்ஞானிகள், 'கரப்பான் பூச்சியிலிருந்து சுரக்கும் பால், இனி மனித தேவைக்கு முக்கிய உணவாக மாறலாம்' என கண்டுபிடித்துள்ளனர்.

அனைத்து கரப்பான் பூச்சிகளும் பாலை உற்பத்தி செய்வதில்லை. Diploptera punctate என்னும் பசுபிக் பகுதிகளில் வாழும் கரப்பான் பூச்சிகள், தங்களது குஞ்சுகளுக்கு உணவாக ஒரு வித பாலை சுரக்கிறது. இதிலிருந்துதான் புரோட்டீன் படிகத்தை கண்டுபிடித்து உள்ளனர். இந்த பூச்சிகளின் பாலில் இருந்து எடுக்கப்படும் உப்புகளில் உள்ள புரோட்டீன், எருமைப் பாலில் இருக்கும் புரோட்டீனை விட 3 மடங்கு அதிகமாகவும், பசுவின் பாலை விட அதிக கலோரி நிறைந்ததாகவும் இருப்பதாக தங்கள் ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள்.

மேலும், “இதில் அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களும் அடங்கியுள்ளன. பசுவின் பாலை விட 4 மடங்கு அதிக சத்து மிக்கதாக உள்ளதால் வருங்கால சந்ததியினரின் உணவு தேவையை பூர்த்தி செய்யும்“ என ஆய்வுக் குழுவின் தலைவர் சுப்பிரமணியன் ராமசாமி தெரிவித்துள்ளார்.

- மு.முருகன்
(மாணவப் பத்திரிகையாளர்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!