ரேஷன் முறைகேடு: பிஏசி முன்பு ராணுவத் தளபதி ஆஜர்

புதுடெல்லி, ஜன.12,2011

கேண்டீன் ஸ்டோர்ஸ் துறையில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழு (பிஏசி) முன்பு இந்திய ராணுவத் தளபதி வி.கே.சிங் ஆஜாராகி விளக்கமளித்தார்.

இந்திய வரலாற்றிலேயே பிஏசி முன்பு ராணுவத் தளபதி ஆஜரானது இதுவே முதன்முறை.

பாதுகாப்பு படை வீரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் சி.எஸ்.டி என்று சுருக்கமாக அழைக்கப்படும் கேண்டீன் ஸ்டோர்ஸ் துறையில் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது்.

இதுதொடர்பாக நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழு (பிஏசி) முன்பு இன்று காலை 11 மணிக்கு ஆஜராகி, இந்திய ராணுவத் தளபதி வி.கே.சிங் ஆஜாராகி விளக்கமளித்தார்.

இதைத் தொடர்ந்து, விமானப் படை தளபதி பி.வி. நாயக் இன்று மாலை பிஏசி முன்பு ஆஜராகி விளக்கமளிப்பார் எனத் தெரிகிறது. அதேபோல், கடற்படை சார்பில் அதன் துணைத் தலைவர் டி.கே.திவான் ஆஜராவார் எனத் தெரிகிறது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!