Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்சிகளின் அங்கீகாரம் ஆய்வு! - தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: கட்சிகளின் அங்கீகார வரையறையை 5 ஆண்டுகாலளில் இருந்து 10 ஆண்டுகள் என தேர்தல் ஆணையம் மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளது.

தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக தற்போது காங்கிரஸ், பா.ஜ.க., பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய 6 கட்சிகள் உள்ளன. இது தவிர, மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக 64 கட்சிகள் உள்ளன.

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் நடத்தப்படும் தேர்தல்களில் இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, தேசிய கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பிட்ட சதவீத வாக்குகளை பெற தவறினால், அவை தேசிய கட்சி என்ற அங்கீகாரத்தை இழக்க நேரிடும். இதேபோல், மாநில கட்சிகள் (பிராந்திய கட்சிகள்) சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிட்ட சதவீத வாக்குகளை பெறாவிட்டால், அவை மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழந்துவிடும்.

ஒரு கட்சி, தேசிய கட்சி என்ற அங்கீகாரத்தை பெற வேண்டுமானால் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் குறைந்தபட்சம் 3 மாநிலங்களில் 2 சதவீத வாக்குகளை பெற்று இருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 4 மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தலிலோ அல்லது சட்டசபை தேர்தலிலோ செல்லுபடியான மொத்த வாக்குகளில் 6 சதவீத வாக்குகளை பெற்று இருக்கவேண்டும். அத்துடன் குறைந்தபட்சம் 4 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 4 மாநிலங்களில் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பெற்று இருக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் பயன்படுத்தும் சின்னங்களை வேறு கட்சிகள் பயன்படுத்த முடியாது. அங்கீகரிக்கப்படாத பிற பதிவு செய்யப்பட்ட கட்சிகள் தேர்தலின்போது தேர்தல் கமிஷன் ஒதுக்கும் சின்னங்களில் இருந்து ஏதாவது ஒரு சின்னத்தைத்தான் பெற்றுக்கொள்ள முடியும்.

இதுவரை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்சிகளின் அங்கீகாரம் பற்றி தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து முடிவு எடுத்தது. இந்த 5 ஆண்டுகால வரையறையை 10 ஆண்டுகள் என தேர்தல் ஆணையம் மாற்றி அமைத்து உள்ளது. அதன்படி, தேசிய கட்சிகள் என்றால் தொடர்ச்சியாக நடைபெறும் இராண்டு நாடாளுமன்ற தேர்தல்களுக்கு பின்னரும், மாநில கட்சிகள் என்றால் 2 சட்டமன்ற தேர்தல்களுக்கு பின்னரும் அவற்றின் அங்கீகாரம் பற்றி ஆய்வு செய்வது என தேர்தல் ஆணையம் தீர்மானித்து உள்ளது.

 

இது தொடர்பாக, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், 'தொடர்ச்சியாக நடைபெறும் இரண்டு நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற தேர்தல்களுக்கு பிறகு (10 ஆண்டுகள்) கட்சிகளின் அங்கீகாரம் பற்றி ஆய்வு செய்யும் வகையில் 1968–ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட தேர்தல் சின்னங்கள் (முன்பதிவு மற்றும் ஒதுக்கீடு) தொடர்பான உத்தரவின் 6 சி பத்தியில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது' என்று கூறப்பட்டு இருக்கிறது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close