Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நிர்பயா வழக்கு குற்றவாளி வினய் சர்மா சிறையில் தற்கொலை முயற்சி!

டெல்லி: நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள குற்றவாளி வினய் சர்மா, இன்று திகார் சிறையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவ மாணவி நிர்பயா, தனது ஆண் நண்பருடன் பேருந்து ஒன்றில் சென்றபோது, ஆறு பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவருடன் வந்த ஆண் நண்பரையும் சரமாரியாகத் தாக்கிய அந்தக் கும்பல் இருவரையும் பின்னர் சாலையோரத்தில் வீசிச் சென்றது. இதில் படுகாயமடைந்த நிர்பயா, இரண்டு வாரங்கள் சிகிச்சைக்குப்பின் சிங்கப்பூர் மருத்துவமனையில் டிசம்பர் 16-ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பேருந்து ஓட்டுனர் ராம் சிங், அவரது சகோதரர் முகேஷ், அக்ஷய் தாகூர்,  பவன், வினய் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 6 பேரை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 4 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. மற்றொரு குற்றவாளி முகமது அஃப்ரோஸ் என்பவர் சிறுவன் என்று நிரூபிக்கப்பட்டதால், அந்த இளம் குற்றவாளி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டு சிறை தண்டனைக்கு பின் வெளியே வந்துள்ளார்.

 

மேலும், குற்றவாளிகளில் ராம்சிங் என்பவர் திகார் சிறையில் கடந்த 2013-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள வினய் சர்மாவும் இன்று திகார் சிறையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். திகார் சிறையில் தற்கொலைக்கு முயன்ற வினய் சர்மாவை, போலீசார் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அங்கு, மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close