Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’இந்தியாவில் 'ஸ்கர்ட்' அணிய வேண்டாம்!’ - வெளிநாட்டினருக்கு சுற்றுலா அமைச்சரின் அறிவுரை

புதுடெல்லி: இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் 'ஸ்கர்ட்' அணிய வேண்டாம் என்று மத்திய சுற்றுலாத்துறை மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்து உள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு உதவுவதற்காக 1363 என்ற உதவி எண் சேவையை அறிமுகம் செய்து வைத்த பின் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இந்திய விமான நிலையத்திற்கு வந்ததும், அவர்களுக்கு 'வெல்கமிங் கிட்' ஒன்று வழங்கப்படும். அதில், இந்தியாவில் இருக்கும்போது வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை பட்டியலிட்டு அதன் விபரங்கள் இடம் பெற்று இருக்கும்.

இந்த பரிந்துரைகளில், குறிப்பாக அவர்கள் சிறிய நகரங்களுக்கு வந்தால், இரவில் தனியாக வெளியில் சுற்ற வேண்டாம். ஸ்கர்ட் போன்ற குட்டை பாவாடைகளை அணியக் கூடாது  என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், அவர்கள் பயணிக்கும் வாகனத்தின் நம்பர் பலகையையும் போட்டோ எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்த நம்பர் பலகை போட்டோவை அவர்கள், தங்கள் நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் அனுப்பி வைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close