Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சர்ச்சைக்குரிய சிடி.யால் அமைச்சர் பதவி நீக்கம்! - கெஜ்ரிவால் நடவடிக்கை

புதுடெல்லி: பெண் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற சர்ச்சைக்குரிய சிடி வெளியானதைத் தொடர்ந்து, டெல்லி மாநில சமூகநலத்துறை அமைச்சரை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி நீக்கம் செய்துள்ளார்.

டெல்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இருப்பவர் சந்தீப் குமார். இவர், சுல்தான்பூர் மஜ்ரா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். அமைச்சர் சந்தீப்குமார் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்ற ஒரு சிடி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடன் முதல்வர் கெஜ்ரிவால் நேற்று திடீர் ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சியின் கொள்கைக்கும் பெயருக்கும் களங்கம் ஏற்படும் வகையில், அமைச்சர் சந்தீப்குமார் பெயரில் வெளியான சிடி பற்றி ஆலோசிக்கப்பட்டது. மேலும், அமைச்சர் சந்தீப் குமாரை பதவி நீக்கம் செய்யும் முடிவை இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கெஜ்ரிவால் எடுத்திருக்கிறார்.

இந்த முடிவை கெஜ்ரிவால், தனது ட்விட்டர் வலைத்தள பக்கத்தில் நேற்று அறிவித்திருக்கிறார். மேலும் அதில், சந்தீப் குமார் குறித்த சர்ச்சைக்குரிய சிடி கிடைத்ததால் அவர் மீது நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் கூறி உள்ளார்.

''அந்த சிடியில் சந்தீப் குமார் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிடி கிடைத்த அரைமணி நேரத்திற்குள் அவரை நீக்கும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது" என்று துணை முதலவர் மணீஷ் சிசோடியா தெரிவித்து உள்ளார்.

ஆம் ஆத்மி அரசில் பதவிநீக்கம் செய்யப்படும் இரண்டாவது அமைச்சர் சந்தீப் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement