வெளியிடப்பட்ட நேரம்: 18:49 (02/09/2016)

கடைசி தொடர்பு:11:24 (03/09/2016)

இமய மலையில் சாதனைப் படைத்த டூ வீலர் பெண்கள் குழு!

சாகசம் செய்வது ஆண்களுக்கு மட்டும் சொந்தம் அல்ல பெண்களாலும் அதை செய்து காட்ட முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள் நம் நாட்டுப் பெண்கள். சமீபத்தில் 11 பெண்கள் கொண்ட குழு ஒன்று, இரு சக்கர வாகனங்களில் இமயமலையை நோக்கி பயணமானார்கள். டி.வி.எஸ் நிறுவனம் ஹிமாலயன் ஹை சீசன் 2 (Highs Season 2 ) என்ற தலைப்பில் இந்த சாகசப் பயணத்தைத் தொடங்கி வைத்தது.

இதில் கலந்துகொள்ள இந்தியா முழுவதிலும் இருந்து நிறைய பெண்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். இமயமலையில் பயணிப்பது என்றால் சும்மாவா. பல்வேறு உடல் தகுதிகள் இருக்கவேண்டும். அந்தத் தேர்வில் 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். இதில் சென்னையைச் சேர்ந்த எப்ரோனா டோரதியும் அடக்கம் என்பது பெருமைக்குரிய விஷயம். கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி ஹிமாச்சல பிரதேசத்தில் தொடங்கிய இந்த சாகசப் பயணம், தொடர்ந்து பத்து நாட்கள் பயணித்து ஆகஸ்ட் 21-ம் தேதி இமய மலையில் 18,380 அடிகள் உயரத்தில் இருக்கும் கார்டுங் லா (Khardung La) என்ற இடத்தை எட்டி சாதனைப் படைத்தனர்.

 

அனம் ஹாசிம் என்ற ஸ்டண்ட் பெண் தலைமையில் 110 சிசி திறன் கொண்ட ஸ்கூட்டரில் பயணம் மேற்கொண்ட இவர்களுக்கு கடுமையான சவால்கள் காத்திருந்தன. கரடுமுரடான சாலைகள், மோசமான வாநிலை, பயங்கரமான பள்ளத்தாக்குகள், கடுமையான குளிரில் அதுமட்டுமா உயரம் செல்ல, செல்ல ஆக்ஸிஜனும் குறைவது என்று பல பிரச்னைகளைச் சந்தித்துளனர். இதையெல்லாம் சமாளித்து, இருசக்கர வாகனத்தில் இவ்வளவு உயரத்தில் கால் பதித்து, எங்களுக்கும் 'தில்' இருக்கு என்று தெரியவைத்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் அதிக உயரத்தைத் தொட்ட முதல் சாகசக் குழு என்ற பெருமையோடு 'இந்தியா புக் ஆப் ரிக்கார்டு' புத்தகத்தில் இடம்பிடித்தனர்.

சாகசப் பயணத்தில் பங்குகொண்டவர்கள்: மேகா சக்ரவர்த்தி (பிலாஸ்பூர்), கபூர் மிஸ்ட்ரி (மும்பை), ரோஷினி சோம்குவார் (நாக்பூர்), எப்ரோனா டோரதி (சென்னை), பல்லவி ஃபவ்தர் (தில்லி), அன்தரா பால் (பெங்களூரு), திருப்தி சர்மல்கர் (மும்பை), சுர்பி திவாரி (பெஙளூரு), ஸ்ருதி நாயுடு (பெங்களூரு)

 

 

 

 

-என்.மல்லிகார்ஜுனா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்