Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திய ராணிகள் இவ்வளவு திறமையானவர்களா?! -அசத்தல் கலெக்‌ஷன் #I am No Man

வீரதீரச் செயல்களில் வரலாறு படைத்த பெண்கள் நம் நாட்டில் எத்தனை பேர் இருந்தனர் என உங்களுக்குத் தெரியுமா? பள்ளியில் படிக்கும்போது பாட புத்தகத்தில் ஓரிருவர் பற்றிப் படித்திருப்பீர்கள்.

 மும்பையைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி தாரா ஆனந்த், சிறு வயதில் இருந்தே ஓவியம் கற்றுவந்தார். இவர் படிப்பு சம்பந்தமாக வெளிநாட்டிக்குச் சென்றபோது, இந்தியாவில் வரலாறு படைத்த பவர்ஃபுல் ராணிகள் யார் யார் என்கிற விவாதம்  நடந்ததாம். நமது நாட்டு ராணிகளைப் பற்றி அவர்கள் சொன்னதும்,  இத்தனை பெண்கள் உள்ளனரா என்று வியப்படைந்தார். தாரா ஆனந்த் தாயகம் திரும்பிய உடனே முதல் வேலையாகத் தன்  லேப் டாப்பில் அமர் சித்ரக்  கதைகளைத் தேட ஆரம்பித்தார்.  சரித்திரம் படைத்த வீராங்கனைகளைப் பற்றிப் படித்து அசந்துபோனார். இந்தியாவில் வாழ்ந்த எல்லா வீரப் பெண்களின் வரலாற்றையும் தூசிதட்டி எடுத்தார்.

நமக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த அற்புதப் பெண்களின் வரலாற்றுக்கு புத்துயிர் தரவேண்டும் என எண்ணி, 'I am no Man'  என்ற தலைப்பில் ஒரு புராஜெக்ட் செய்தார்.  ருத்ரமாதேவி, லட்சுமி பாய், சிவகங்கையை ஆண்ட வேலுநாச்சியார், ராணி மங்கம்மாள், சென்னம்மா என இந்தியாவில் உள்ள மொத்தம் 14 பவர்ஃபுல் ராணிகளின் ஓவியங்களை இந்தக் காலத்து ட்ரெண்டுக்கு ஏற்ற கிராஃபிக் ஸ்டைலில் வரைந்து, அவர்களுடைய வரலாற்றையும் பதிவு செய்துள்ளார்.  இதனை ஃபேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம்களில் வெளியிட்டதும், ட்ரெண்ட் ஆகி லைக்குகளை அள்ளுகிறது.

வீர மங்கைகளைப் பற்றி நீங்களும் தெரிந்துகொள்ளவேண்டுமா? இந்த ஸ்லைடுகளைப் பாருங்கள்...

- என்.மல்லிகார்ஜுனா

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close