மனித உரிமை மாநாட்டுக்கு மத்திய அரசு ‘நோ!’ - காஷ்மீர் இளைஞருக்குத் தடை | Central Governmet said no to Kashmir youth to participate in 33 UN Human rights conference

வெளியிடப்பட்ட நேரம்: 11:28 (16/09/2016)

கடைசி தொடர்பு:15:04 (16/09/2016)

மனித உரிமை மாநாட்டுக்கு மத்திய அரசு ‘நோ!’ - காஷ்மீர் இளைஞருக்குத் தடை

 

க்கிய நாடுகள் சபையின் 33-வது மனித உரிமை மாநாடு ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. மாநாட்டில் பல்வேறு நாடுகளின் மனித உரிமைக் குழுக்கள் பங்கேற்றுவரும் நிலையில் இந்தியாவின் சார்பாக நான்கு பேர் கொண்ட அணி ஒன்று பங்கேற்க இருந்தது. அதில், ஜம்மு - காஷ்மீர் சிவில் சமூகக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், தன்னிச்சையற்றுக் காணாமல்போவோருக்கான ஆசியக் கூட்டமைப்பின் தலைவருமான  குர்ரம் பர்வேஸும் அடக்கம். அவர், டெல்லி இந்திரா காந்தி விமானநிலையத்திலிருந்து ஜெனீவா புறப்பட... விசா மற்றும் முழு பரிசோதனை முடிந்து விமானம் ஏற இருந்த நிலையில், அங்கிருந்த இமிக்ரேஷன் அலுவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். மேலும், அவர் ஜெனீவா புறப்படுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் இதில் மத்திய புலனாய்வுப் பிரிவின் தலையீடு இருப்பதாகவும் அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மற்ற மூவருக்கு மட்டும் மாநாட்டில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜம்மு - காஷ்மீர் சிவில் சமூகக் கூட்டமைப்பின் தலைவர் இம்ரான் பர்வேஸ், ‘‘கடந்த 68 நாட்களாக காஷ்மீரில், அரசால் பல்வேறு ஒடுக்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 80-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்துள்ளனர். 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்து உள்ளனர். கடந்த பல வருடங்களாக காஷ்மீரில் நிகழ்பவற்றை ஆய்வறிக்கையாகச் சமர்ப்பிக்கத்தான் பர்வேஸ், ஜெனீவா செல்வதாக இருந்தார். மனித உரிமை கமிஷனில் இருந்தும் அரசு, மனித உரிமைகளை மீறியது. அதோடு மட்டுமில்லாமல் இப்போது பர்வேஸின் பயணத்தைத் தடுத்து நிறுத்தி மனித உரிமை கமிஷனிடமிருந்து இவர்கள் குற்றங்களை மறைக்கப் பார்ப்பது தெள்ளத் தெளிவாகிறது” என்றார்.

இந்தியாவின் இமிக்ரேஷன் அலுவலர்கள் குழு இப்படியாக தன்னார்வலர்களின் வெளிநாட்டுப் பயணங்களைத் தடுத்து நிறுத்துவது இது முதல் முறை இல்லை. கடந்த ஜூன் 2015-ல், ‘க்ரீன் பீஸ் இந்தியா’ என்னும் சுற்றுச்சுழல் தன்னார்வல அமைப்பின் உறுப்பினர் ஆரோன் க்ரே பிளாக் என்பவர் இந்தியாவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டார். மத்தியப் பிரதேச மாநிலம் மாஹானில் அங்குள்ள மக்களிடையே தன் ஆய்வுகளை மேற்கொண்ட ‘க்ரீன் பீஸ் இந்தியா’ அமைப்பின் மற்றோர் உறுப்பினரான ப்ரியா பிள்ளை தன்னுடைய ஆய்வறிக்கையை லண்டனில் நடந்த சர்வதேச மாநாட்டில் சமர்ப்பிக்க இருந்த நிலையில், அவருக்கும் வெளிநாடு பயணம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. குறிப்பாக ப்ரியா பிள்ளை தேசத்துக்கு எதிராகக் குற்றம்சாட்டப்பட்டார்.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கமிஷனின் ஆணையாளர் சையத் ராத் அல் ஹுசைன், நேற்று மாநாட்டில் பேசுகையில், ‘‘நாடுகள் தம் மக்களின் மீது மேற்கொள்ளும் வன்முறைகளை மறைப்பதால் அது மற்ற உலக நாடுகளின் கண்களுக்குத் தெரியாமல் இருக்கப்போவதில்லை’’ எனத் தெரிவித்துள்ளார்.

- ஐஷ்வர்யா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்