வெளியிடப்பட்ட நேரம்: 11:29 (01/03/2012)

கடைசி தொடர்பு:11:29 (01/03/2012)

கொல்லம்: படகு மீது கப்பல் மோதி 2 மீனவர்கள் பலி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே படகு மீது கப்பல் ஒன்று மோதியதில், மீனவர்கள் இருவர் கடலில் மூழ்கி பலியாகினர். மேலும் மூன்று பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

தோட்டப்பள்ளி என்ற இடத்தின் அருகே கடற்பகுதியில் 7 மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடித்துக்கொண்டிருந்தது. அந்தப் படகின் மீது நள்ளிரவுக்குப் பின் 2 மணியளவில் ஒரு கப்பல் மோதியது.

இதில், கடலில் மூழ்கி இறந்த மீனவர் இருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது என்றும், 3 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது என்றும் கொல்லம் மாவட்ட கலெக்டர் பி.ஜி.தாமஸ் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் மீட்கப்பட்ட 2 மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, படகின் மீது மோதிய கப்பலை சுற்றி வளைக்கும் பணியில் கடலோரக் காவல்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இத்தாலிய கப்பல் காவலர்கள் 2 மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சில தினங்களில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம், கேரள மீனவர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்