வெளியிடப்பட்ட நேரம்: 19:42 (27/09/2016)

கடைசி தொடர்பு:14:00 (29/09/2016)

சிந்து நதியின் மிசை இந்தியாவிலே! - மோடியின் அடுத்த பிளான்...

ள்நாட்டு விவகாரங்களைப் பொறுத்தவரை காவிரி நதிநீர் பங்கீடு சிக்கல் ஒரு புறம் தொடர்ந்து கொண்டிருக்க, 56 வருடங்கள் பழமையான இந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்யும் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. 18 இந்திய ராணுவ வீரர்களை பலிவாங்கிய உரி தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு இருநாடு தொடர்பான விவகாரம் பற்றிய முதல் உயர்மட்டக் குழு கூட்டம்

இந்து நதி நீர் பங்கீடு

சீனாவில் உற்பத்தியாகும் இந்து நதி, இந்தியா வழியாகக் கடந்து பாகிஸ்தானில் முடிகிறது. 1960-ல் உலக வங்கியின் தலையீட்டில் இந்தியா பாகிஸ்தான் இடையே அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கும், பாகிஸ்தான் அதிபர் அயூப் கானுக்கும் இடையே இந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்து நதி நீரில் 80 சதவிகிதத்தை பாகிஸ்தான் பயன்படுத்திக்கொள்ளும் என்றும் 20 சதவிகிதம் இந்தியாவுக்கு என்றும் முடிவுகள் எட்டப்பட்டன. இந்த ஒப்பந்தத்தில் சீனா பங்கேற்கவில்லை. இந்தியாவின் வழியாக இந்து நதியின் கிளை ஆறுகளான ஜீலம், செனாப், சட்லஜ், ராவி, பீஸ் ஆகியவைப் பிரிந்து பாகிஸ்தானுக்குச் சென்று அதே இந்து நதியில் மீண்டும் கலக்கிறது. ஒப்பந்தத்தின் படி பாகிஸ்தான் இந்து, ஜீலம், செனாப் நதிகளின் நீரை போக்குவரத்து, பாசனத்துக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். ராவி, சத்லஜ், பீஸ் நதிகளின் நீர் இந்தியாவுக்கு எனவும் முடிவு செய்யப்பட்டது, இந்தியாவுக்கு இதில் 20 சதவிகித உரிமை இருந்தாலும் இன்று வரை அதன் மீதான தனது உரிமையை மத்தியில் இருந்த எந்த அரசும் கேட்டுப்பெற்றது இல்லை. பாகிஸ்தான் மட்டுமே பெரும் அளவிலான நீரை உபயோகப்படுத்திக்கொண்டது.

உரி சம்பவத்துக்குப் பிறகான சந்திப்பு:

இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தின் மீதான மறு ஆய்வுக் கூட்டம் பிரதமர் மோடியின் தலைமையில் நடந்தது. அதில் பேசிய மோடி, ''ரத்தமும் நீரும் ஒரே ஆறில் ஒன்றாக ஓடமுடியாது. காஷ்மீர் விவசாயிகளுக்குப் பயனாகும் வகையில் இந்து நதியின் இடையே அணை கட்டும் திட்டம் துரிதப்படுத்தப்படும். அதன்படி கிளைநதியான செனாபின் குறுக்கே பக்குள்தல், ஸ்வால்காட், பர்சார் ஆகிய இடங்களில் திட்டமிட்டபடி அணைகள் கட்டும் நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும்" என்றார். செனாப் நதியின் குறுக்கே அணைக்கட்டுவது பாகிஸ்தானுக்கு ஒருவகையிலான எச்சரிக்கை. தீவிரவாதத்துக்குத் துணை போகும் பாகிஸ்தானின் செயலுக்கு முற்றுப்புள்ளிவைக்கும் வகையில் இது இருக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-ஐஷ்வர்யா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்