பஞ்சாப்: ஆட்சியை தக்க வைக்கிறது சிரோமணி அகாலிதளம் கூட்டணி

பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் சிரோமணி அகாலிதளம் - பிஜேபி கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் சூழல் நிலவுகிறது.

முற்பகல் 11 மணி நிலவரப்படி, சிரோமணி அகாலிதளம் கூட்டணி 59 இடங்களில் முன்னிலையும், 3 இடங்களில் வெற்றியும் பெற்று, மொத்தம் 62 இடங்களை வசப்படுத்தும் நிலையில் உள்ளது.

இந்த மாநிலத்தில் பெரும்பான்மைக்கு 59 இடங்கள் தேவை என்ற நிலையில், மீண்டும் ஆட்சியமைக்கிறது, சிரோமணி அகாலிதளம் - பிஜேபி கூட்டணி. 

ஆளும் கூட்டணிக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி, 51 இடங்களை வசப்படுத்துகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு தற்போது சிரோமணி

அகாலிதளம் - பிஜேபி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

சிரோமணி அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த பிரகாஷ் சிங் பாதல் முதல்வராக உள்ளார்.   காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ளது.

பஞ்சாப்பில் சிரோமணி அகாலிதளம் 94 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான பிஜேபி 23 தொகுதிகளிலும் போட்டியிட்டன. காங்கிரஸ் 117 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!