பெட்ரோல் இறக்குமதியை குறைக்க புதிய திட்டம் | Cabinet nod to revising price of ethanol

வெளியிடப்பட்ட நேரம்: 10:38 (14/10/2016)

கடைசி தொடர்பு:10:55 (14/10/2016)

பெட்ரோல் இறக்குமதியை குறைக்க புதிய திட்டம்

 

பெட்ரோலில் சேர்க்கப்படும் எத்தனாலின் விலையை, சந்தைக்கு ஏற்ப மாற்றியமைக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, எத்தனால் விலை, லிட்டருக்கு, மூன்று ரூபாய் குறைந்து உள்ளது.  கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் உப பொருளான எத்தனால், பெட்ரோல் இறக்குமதியை குறைக்கும் வகையில், பெட்ரோலில், 10%  சேர்க்கப்படுகிறது. 

டெல்லியில் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பல்வேறு திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டன.

எத்தனால் விலை மாற்றம் குறித்து, பெட்ரோலிய அமைச்சர், தர்மேந்திர பிரதான் கூறியதாவது, ’பெட்ரோல் இறக்குமதியை குறைக்கும் வகையில், பெட்ரோலில், 10 சதவீதம் எத்தனால் சேர்க்கப்படுகிறது. கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் உப பொருளான எத்தனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு  ஒரு லிட்டர் விலை, 48.50 முதல், 49.50 ரூபாய் வரை விற்கப்பட்டது. ஆனால், சர்க்கரை ஆலைகளுக்கு, லிட்டருக்கு, 42 ரூபாய் தான் தரப்படுகிறது, மீதம் வரிகள். அதனால், சந்தைக்கு ஏற்ப, எத்தனால் விலையை அவ்வப்போது மாற்றியமைக்க, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், சந்தையில் சர்க்கரையின் விலைக்கு ஏற்ப, எத்தனால் விலையும் மாற்றி அமைக்கப்படும். தற்போது ஏற்பட்டுள்ள மாற்றப்படி, எத்தனால் விலை, லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைந்து, 39 ரூபாயாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close