குஜராத்தில் பின்லேடனுடன் இணைத்து கெஜ்ரிவால் போஸ்டர் | Poster of kejriwal with osama binladen in gujarat

வெளியிடப்பட்ட நேரம்: 13:02 (15/10/2016)

கடைசி தொடர்பு:13:25 (15/10/2016)

குஜராத்தில் பின்லேடனுடன் இணைத்து கெஜ்ரிவால் போஸ்டர்

டெல்லியில் நடைபெற்று வந்த கெஜ்ரிவால்-பா.ஜ.க மோதல் தற்போது குஜராத் வரை சென்றுள்ளது. குஜராத்துக்கு நான்கு நாள் பயணமாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்றுள்ளார். அங்கு யாரோ சில ஆசாமிகள் ஒசாமா பின்லேடன், ஹஃபீஸ் சையது உள்ளிட்ட தீவிரவாதிகளுடன் கெஜ்ரிவால் ஃபோட்டோவையும் இணைத்து, 'பாகிஸ்தான் ஹீரோக்கள்' என்று போஸ்டரும் ஒட்டிவிட்டார்கள்.


இந்த போஸ்டரைக் கண்ட கெஜ்ரிவால் பா.ஜ.க தான் இந்த வேலையை செய்துள்ளது என்று கொதித்து போயுள்ளார். ஆனால் பா.ஜ.க.வோ இதை மறுத்திருக்கிறது. "சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் குறித்து தவறாக பேசிய கெஜ்ரிவாலை பா.ஜ.க. தான் விமர்சிக்க வேண்டும் என்றில்லை. நாட்டின் மேல் பற்றுள்ள யார் வேண்டுமானால் அவரை விமர்சிப்பார்கள்"  என்று பா.ஜ.க கூறியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க