விரைவில் ட்விட்டரில் ஐ.பி.எல் | IPL soon to be telecast Twitter

வெளியிடப்பட்ட நேரம்: 13:56 (17/10/2016)

கடைசி தொடர்பு:14:28 (17/10/2016)

விரைவில் ட்விட்டரில் ஐ.பி.எல்

ஐ.பி.எல் போட்டிகளை ட்விட்டர் சமூக வலைதளத்தில் போட்டி நடக்கும்போதே நேரடியாக ஒளிபரப்ப ட்விட்டர் நிறுவனம் பிசிசிஐ-யிடம் பேசி வருகிறது. அப்படி, ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் இனி ஐபிஎல் போட்டிகளை ட்விட்டர் பக்கத்திலும் பார்க்கலாம்.


இது பற்றி ட்விட்டர் நிறுவனம், 'நாங்கள் உலகம் முழுவதும் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்ப சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் பேசி வருகிறோம். அதன் ஒரு பகுதியாகத்தான் ஐ.பி.எல் ஒளிபரப்பும்.' என்று தெரிவித்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க