Published:Updated:

அருணாச்சலப் பிரதேசம்: பனிச்சரிவில் சிக்கிக்கொண்ட 7 இந்திய ராணுவ வீரர்கள் - மீட்புப்பணிகள் தீவிரம்!

அருணாச்சலப் பிரதேசத்தில் பனிப்பொழிவு ( Twitter )

அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான பனிப்பொழிவில் ஏழு இந்திய ராணுவ வீரர்கள் சிக்கித் தவித்துவருவதாகக் கூறப்படுகிறது.

அருணாச்சலப் பிரதேசத்தின் காமேக் செக்டாரில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாகவே அந்தப் பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவிவருகிறது. இந்த நிலையில், கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் ரோந்துப் பணிக்குச் சென்ற ஏழு இந்திய ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கிக்கொண்டு தவித்துவருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

அருணாச்சலப் பிரதேசத்தில் பனிப்பொழிவு
அருணாச்சலப் பிரதேசத்தில் பனிப்பொழிவு
Twitter

சிக்கிக்கொண்ட ராணுவ வீரர்களை மீட்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. மீட்புப் பணிகளில் உதவ சிறப்புக் குழுக்கள் விமானம் மூலம் அனுப்பப்பட்டுள்ளன என அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு, ஜூலை மாதம் இதே பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.