Published:Updated:

தந்தைக்கு 5-வது திருமணம்; வைபவத்தைக் கைதாக மாற்றிய 7 குழந்தைகள்! - போலீஸ் பிடியில் பலே ஆசாமி

திருமணம் ( சித்திரிப்புப் படம் )

தங்கள் தந்தைக்கு நடைபெறவிருந்த 5-வது திருமணத்தை, 7 குழந்தைகள் சேர்ந்து தடுத்து நிறுத்தினர்.

தந்தைக்கு 5-வது திருமணம்; வைபவத்தைக் கைதாக மாற்றிய 7 குழந்தைகள்! - போலீஸ் பிடியில் பலே ஆசாமி

தங்கள் தந்தைக்கு நடைபெறவிருந்த 5-வது திருமணத்தை, 7 குழந்தைகள் சேர்ந்து தடுத்து நிறுத்தினர்.

Published:Updated:
திருமணம் ( சித்திரிப்புப் படம் )

ஒரு திருமணத்தைச் செய்துவிட்டு, பின்னர் யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக இன்னொரு திருமணம் செய்வதே சட்டப்படி குற்றம் எனும்போது, ஒருவர் 5-வது திருமணத்துக்கே ரெடியாகி, வசமாக மாட்டிக்கொண்டு மக்களிடம் தர்மஅடி வாங்கிய சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் 55 வயதான ஷாபி அகமது. இவருக்கு ஏற்கெனவே நான்கு திருமணங்கள் நடந்திருக்கின்றன. மேலும் இவருக்கு ஏழு குழந்தைகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஷாபி அகமது, யாருக்கும் தெரியாமல் 5-வது திருமணத்துக்கு ரெடியாகியிருக்கிறார். இந்த விஷயம் எப்படியோ இவரின் மனைவிகளுக்கும், குழந்தைகளுக்கும் தெரியவர, அவர்களும் உடனடியாக இது பற்றி போலீஸில் புகாரளித்திருக்கின்றனர்.

திருமணம்
திருமணம்

பின்னர் திருமண நாளான கடந்த செவ்வாயன்று, ஷாபி அகமதின் ஏழு குழந்தைகளும், மற்ற மனைவிகளும் திருமண வீட்டுக்குள் நுழைந்து விஷயத்தைப் பற்றிக் கூறியிருக்கின்றனர். அந்த ஏழு குழந்தைகளும், மணமகள் வீட்டாரிடம் தங்களைப்பற்றிக் கூறியிருக்கிறார்கள். இதையடுத்து சிறிது நேரத்திலேயே அங்கு சலசலப்பு ஏற்பட, முடிவில் அது சண்டையாகவே மாறியது. பின்னர், அங்கு கூடியிருந்த மக்கள் மணமகனை அடி வெளுத்துவாங்கத் தொடங்கினர். அப்போது, மணமகளும் அந்த இடத்திலிருந்து ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

மணமகன் கைது
மணமகன் கைது

பின்னர் தங்களின் தந்தை மாதா மாதம் பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டதாகக் கூறிய குழந்தைகள், தங்களின் தந்தை 5-வது திருமணம் செய்துகொள்ளப்போவது பற்றி அறிந்துதான் இப்படிச் செய்ததாகக் கூறினார்கள். மேலும் இது பற்றி பேசிய கோட்வாலி காவல் நிலைய ஆய்வாளர் தேஜ் பிரகாஷ், ``இந்தச் சம்பவம் குறித்து மணமகனின் குழந்தைகள் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். அதன் பிறகு, நாங்கள் சம்பவ இடத்துக்குச் சென்று அந்த நபரைக் கைதுசெய்தோம்" எனத் தெரிவித்தார்.