Published:Updated:

லடாக்: ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வாகனம்... ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழப்பு!

இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழப்பு ( கோப்புப் படம் )

லடாக்கில் நிகழ்ந்த வாகன விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்து விட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

லடாக்கின் துர்டுக் பகுதியில் 26 ராணுவ வீரர்கள் வாகனத்தில் சென்றபோது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இந்த வாகன விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்து விட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

ராணுவ வீரர்கள் பயணித்த வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால், மீட்புப் பணிகளுக்கு இந்திய விமானப்படையின் உதவியும் கோரப்படும் எனக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism